கொலையா? தற்கொலையா?

Untitled Document புத்த மதத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள ஒர் பர்மாக்காரனுக்கு மீன் பிடிப்பதில் மிகுந்த ஆசை. ஆனால் பிறஉயிர்களை கொல்லக்கூடாது என புத்த பிரான் உபதேசித்திருக்கிறார். எனவே அவன் ஒரு யுக்தி செய்தான். ஒரு மரக்கட்டையை எடுத்து அதற்கு வெள்ளை வர்ணம் பூசி அதனை ஆற்றுத் தண்ணீரின் கரையோராமாகப் போட்டான் மீன்கள் அதனைக் கண்டு என்னவோ ஏதோவென்று பயந்து துள்ளி மணலிலே வந்து விழுந்து மாண்டன. மீன்களைப் பொறுக்கி பையிலே நிறைத்து கொண்டான் அந்த பர்மியன், “இப்படி கொலை செய்யாலாமா?” என அவன் நண்பர் கேட்டார். “நான் எங்கே கொலை செய்கிறேன். அவை தற்கொலை செய்து கொள்கின்றன. அப்படி தற்கொலை செய்பவற்றை நான் பொறுக்கிக் கொள்கிறேன். அவ்வளவுதான்!” என்றானாம் அந்த பர்மீயன்.

© Copyright 2011. All rights reserved. Contact: dbs Supported by True Life Centre